மெக்சிகோவில் மிக மோசமான தொடருந்து விபத்து! பலர் உயிரிழப்பு ; நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம்
மெக்சிகோவின் ஓக்ஸாக்கா (Oaxaca) பிராந்தியத்தில் மிக மோசமான தொடருந்து விபத்த்தில் பலர் உயிரிழந்ததுள்ளதுடன் , நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்க்ப்படுகின்றது.
பசிபிக் மற்றும் வளைகுடா பகுதிகளை இணைக்கும் (Oaxaca) பிராந்தியத்தில் தொடருந்து தடம் புரண்டதில், குறைந்தது 13 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.

மீட்புப் பணிகள் மற்றும் விசாரணைகள்
இந்த விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மீட்புப் பணிகள் மற்றும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக சமீபத்தில் தொடங்கப்பட்ட இந்தஇண்டர் ஓசியானிக் (Inter oceanic) தொடருந்து திட்டம், நாட்டின் மிக முக்கியமான வர்த்தக வழித்தடமாக கருதப்படுகிறது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க மெக்சிகோ அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.