வறுமையால் தாய் நாட்டை விட்டு வெளியேறிய மக்கள்: 53 பேர் சம்பவ இடத்திலேயே மரணம்
மெக்சிகோவில் அகதிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 53 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சோக சம்பவம் நடந்துள்ளது.
மத்திய அமெரிக்க கண்டத்தில் கடுமையான வறுமை நிலவுவதால், அங்கு வசிக்கும் மக்கள் மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்கு செல்ல முயல்கின்றனர்.
அப்படியே டிரக்கில் மறைந்து கொண்டு மெக்சிகோ வழியாக சென்ற போது சியாபஸ் பகுதியில் விபத்துக்குள்ளானது.
இதில் டிரக்கில் இருந்த 53 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரழந்தனர், 58 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக சியாபஸ் சிவில் பாதுகாப்பு முகமை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்தாண்டு மட்டும் மெக்சிகோ- அமெரிக்கா எல்லையை கடக்க முயன்று 650 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.