பிரான்ஸுக்கு புதிய பிரதமரை நியமித்த ஜனாதிபதி இமானுவேல்!
பிரான்ஸ் புதிய பிரதமராக பிரக்ஸிட் பேச்சுவார்த்தையாளரான மைக்கேல் பார்னியரை ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் நியமித்துள்ளதாக எலிஸி அரண்மனை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
73 வயதான மைக்கேல் பார்னியர், 2016 - 2021 வரை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்கியுள்ளார்.

மைக்கேல் பார்னியர் புரூசெல்ஸ் நகரில் மிகவும் பிரபலமானவராக இருந்தாலும், பிரான்ஸ் நகரில் அவ்வளவு பிரபலமானவர் அல்ல என்று கூறப்படுகிறது.
அவர் லெஸ் குடியரசுக் கட்சியின் மூத்த உறுப்பினராவார். இந்நிலையில் மே மாதத்தில் நடைபெற்ற தேர்தலில் பிரான்ஸில் தொங்கு நாடாளுமன்றம் ஏற்பட்டது.
இடதுசாரி மக்கள் முன்னணி அதிக இடங்களை வென்றது. ஆனால், முழுமையான பெரும்பான்மை பெறவில்லை.
இந்த நிலையில்தான் அதிபர் இமானுவேல் மேக்ரானால், பிரான்ஸ் புதிய பிரதமராக மைக்கேல் பார்னியர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் மூலம் வரலாற்றில் 5-ஆவது குடியரசின் மிகவும் வயதான பிரதமர் எனும் பெயரை மைக்கேல் மைக்கேல் பார்னியர் பெறுவார்.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        