பிரச்சாரத்தின் போது கேலி; டிரம்பின் கருத்துக்களை கடுமையாக சாடிய மிச்செல் ஓபாமா
முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் குணாதிசயத்தையும், அவரது இனவெறி கருத்துக்களையும் முன்னாள் ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஓபாமா கடுமையாக சாடியுள்ளார்.
அமெரிக்க ஜனநாயக கட்சியின் மாநாட்டில் உரையாற்றுகையில் அவர் இவ்வாரு சாடினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
கறுப்புவேலைகள் என கேலி செய்த டிரம்ப்
உலதை பற்றிய டிரம்பின் வரையறுக்கப்பட்ட குறுகிய பார்வை, இரண்டு கடின உழைப்பாளிகளான கல்விகற்றவர்களான ,வாழ்க்கையில் வெற்றிபெற்றவர்களான இருவரின் இருப்பு குறித்து அவருக்கு அச்சத்தை ஏற்படுத்தியது என தெரிவித்துள்ள மிச்செல் ஓபாமா, அந்த இருவரும் கறுப்பினத்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
கறுப்புவேலைகள் என டிரம்ப் தனது பிரச்சாரத்தின் போது கேலி செய்திருப்பதையும் மிட்செல் ஒபாமா சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்காவிற்குள் வரும் குடியேற்றவாசிகள் கறுப்பினத்தவர்களின் கறுப்புவேலைகளை பறிக்கின்றனர் என டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் டிரம்ப் தற்போது தேடும் வேலை( ஜனாதிபதி பதவி ) அந்த கறுப்புவேலைகளில் ஒன்றாகயிருக்கலாம் என யார் அவருக்கு தெரிவிக்கப்போகின்றார்கள் என மிட்செல் ஒபாமா கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேவேளை மிட்செல் ஒபாமாவின் இந்த கேள்விக்கு மாநாட்டில் காணப்பட்டவர்கள் கரகோசத்தினை பதிலாளக வழங்கியுள்ளனர். டிரம்ப் உண்மையான யோசனைகள் மற்றும் தீர்வுகளிற்கு மாறாக அசிங்கமான பெண் வெறுப்பு ,இனவாத பொய்களை முன்வைப்பவர் டிரம்ப் எனவும் மிச்செல் ஒபாமா சாடியுள்ளார்.
அதேசமயம் ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டிலும், அமெரிக்காவிலும் கமலா ஹரிஸ் குறித்து காணப்படும் உணர்வுகள் 2008 இல் தனது கணவரின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் காணப்பட்ட உணர்வுகள் போல உள்ளதாக மிச்செல் ஒபாமா தெரிவித்துள்ளார்.
காற்றில் ஏதோ அற்புத மாயாஜாலம் காணப்படுகின்றது,மிகநீண்டகாலமாக ஆழமாக புதைக்கப்பட்ட ஒரு உணர்வு காணப்படுகின்றது இது நம்பிக்கையின் தொற்றும் சக்தி என தெரிவித்த அவர், நம்பிக்கை என்பது மீண்டும் திரும்புகின்றது எனவும் மிட்செல் ஒபாமா இதன்போது தெரிவித்தார்.