AI மூலம் பல நூறு மில்லியன் டொலர் சேமித்த மைக்ரோ சொப்ட் நிறுவனம்
மைக்ரோசொப்ட் நிறுவனம் ஆயிரக்கணக்கான பணியாளர்களை நிறுத்தியபோதும், செயற்கை நுண்ணறிவு தனது பணியிடத்தை எவ்வளவு தூரம் உருமாற்றுகிறது என்பதை ஊழியர்களுக்குக் காட்ட ஆர்வமாக உள்ளது.
இந்த வாரம் இடம்பெற்ற விளக்கக்காட்சியின்போது, நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரி ஜூட்சன் அல்தோஃப், விற்பனை, வாடிக்கையாளர் சேவை முதல் மென்பொருள் பொறியியல் வரை அனைத்திலும் செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் உற்பத்தியை அதிகரிக்கின்றன என்று கூறியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் 2024ல் மைக்ரோசொப்டின் அழைப்பு மையங்களில் மட்டும் 500 மில்லியன் டொலருக்கும் அதிகமாக சேமித்ததாகவும், ஊழியர், வாடிக்கையாளரின் திருப்தியையும் அதிகரித்ததாகவும் அல்டோஃப் கூறியுள்ளார்.
சிறிய வாடிக்கையாளர்களுடனான தொடர்புகளைக் கையாள செயற்கை நுண்ணறிவை நிறுவனம் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.
தொடக்கநிலையிலேயே பல மில்லியன் டொலர்களை ஈட்டியுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.