கனடா எல்லையில் இந்திய குடும்பம் இறந்தது எப்படி? விரிவான விசாரணை துவக்கம்
கனடா- அமெரிக்க எல்லையில் பனியில் உறைந்து இந்திய குடும்பம் இறந்த சம்பவத்தில் விரிவான விசாரணையை அதிகாரிகள் துவக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரொறன்ரோவில் இருந்து குறித்த இந்திய குடும்பம் தெற்கு மனிடோபாவுக்கு பயணப்பட்டது தொடர்பாக உறுதி செய்யவும் விசாரணை அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
பனியில் உறைந்து இறந்த நான்கு பேரும் மேற்கு இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிசார் மற்றும் தூதரக அதிகாரிகள் கடந்த வாரம் அடையாளம் கண்டு உறுதி செய்துள்ளனர்.
இவர்களது சடலங்கள் ஜனவரி 19ம் திகதி எமர்சன் அருகே காணப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில், அமெரிக்காவின் முக்கிய விசாரணை பிரிவுகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாக மனிடோபா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி, இந்திய அதிகாரிகள் தரப்புடனும், அமெரிக்க அதிகாரிகளுடன் இந்த விவகராம் தொடர்பில் தகவல் பரிமாற்றம் தொடர்ந்து நடைபெறுவதாகவும் விசாரணை அதிகாரிகள் தரப்பு குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும், கனடா சார்பில் இந்த வழக்கில் இதுவரை எந்த குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யவில்லை என்றே தெரிய வந்துள்ளது.