ரஷ்ய படையினரின் மிலேச்சத்தமான தாக்குல்; தரைமட்டமானது குழந்தைகள் மருத்துவமனை
ரஷ்ய படைகள் உக்ரைனின் மரியுபோல் நகரத்தில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் 17 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
கடந்த 24 ஆம் திகதி முதல் உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
இதற்கிடையில், கடந்த சில நாட்களாக மனிதாபிமான அடிப்படையில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்திருந்த நிலையில், Mariupol ல் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யா வான்வழித் தாக்குதலை நடத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் விமானதாக்குதலை தொடர்ந்து குழந்தைகள் மருத்துவமனையின் இடிபாடுகளின் கீழ் சிக்குண்டுள்ளன என உக்ரைன் ஜனாதிபதி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார்.
மரியுபோல் மகப்பேற்று மருத்துவமனை ரஷ்யாவின் நேரடி தாக்குதலிற்குள்ளாகியுள்ளது,மக்களும் குழந்தைகளும் இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ளனர்
, இந்த பயங்கரத்தை அலட்சியம் செய்வதன் மூலம் உலகம் எத்தனை நாட்களிற்கு இதற்கு துணைபோகப்போகின்றது எனவும் அவர் கவலை வெளியிட்டார்.
ரஷ்யாவுக்கான , வான்வெளியை உடனடியாக மூடி, கொலைகளை தடுத்துநிறுத்துமாறு வேதனை வெளியிட்ட அவர், உங்களிற்கு அதற்கான வலுவுள்ளது ஆனால் நீங்கள் மனித தன்மையை இழக்கின்றீர்கள் எனவும் உக்ரைன் ஜனாதிபதி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார்.

