மகாராணிக்காக இலட்சக்கணக்கில் குவிந்த மக்கள்!

United Kingdom Queen Elizabeth II King Charles III
By Sundaresan Sep 15, 2022 06:32 AM GMT
Sundaresan

Sundaresan

Report

ராணிக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் பல கி.மீ. தொலைவுக்கு நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றனர்.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்(Queen Elizabeth II) உடல்நல கோளாறுகளால் கடந்த 8-ந் தேதி தனது 96 வயதில் மரணம் அடைந்தார். ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையில் அவரது உயிர் பிரிந்தது. ராணியின் மறைவால் ஒட்டுமொத்த இங்கிலாந்தும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

அவரது இறுதி சடங்கு வருகிற 19-ந் திகதி லண்டனில் நடைபெறுகிறது. இதில் உலக தலைவர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள். இதனிடையே ஸ்காட்லாந்து தலைநகர் எடின்போராவில் வைக்கப்பட்டிருந்த ராணியின் உடலுக்கு முதலில் அரச குடும்பத்தினரும், பின்னர் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.

மகாராணிக்காக இலட்சக்கணக்கில் குவிந்த மக்கள்! | Millions Of Maharanis People

அதன் பின்னர் ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டி விமானப்படை விமானம் மூலம் நேற்று முன்தினம் லண்டன் கொண்டு செல்லப்பட்டது. அங்கு ராணியின் உடலை மன்னர் 3-ம் சார்லசும்,(King Charles III) ராணி கமிலாவும் பெற்றுக்கொண்டனர்.

பின்னர் ராணியின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு அரண்மனை அதிகாரிகளும், பணியாளர்களும் ராணிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில் நேற்று உள்ளூர் நேரப்படி மதியம் 2.22 மணி அளவில் பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டி பீரங்கி வண்டியில் ஏற்றப்பட்டு, துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.

மகாராணிக்காக இலட்சக்கணக்கில் குவிந்த மக்கள்! | Millions Of Maharanis People

அதை தொடர்ந்து ராணியின் உடல் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்துக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. ராணியின் சவப்பெட்டியின் மீது அவரது கிரீடம் வைக்கப்பட்டிருந்தது.

ஊர்வலத்தில் ராணியின் உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டிக்கு பின்னால் மன்னர் 3-ம் சார்லஸ்,(King Charles III) அவரது மகன்களான இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரி நடந்து சென்றனர்.

அரச பதவிகளை துறந்த இளவரசர்

அதேபோல் மன்னர் 3-ம் சார்லசின்(King Charles III) உடன்பிறப்புகளான இளவரசி ஆனி, இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் இளவரசர் எட்வர்டு ஆகியோரும் ராணியின் சவப்பெட்டி பின்னால் நடந்து சென்றனர்.

மன்னர் 3-ம் சார்லஸ், இளவரசி ஆனி, இளவரசர்கள் எட்வர்டு மற்றும் வில்லியம் ஆகியோர் ராணுவ உடைகளை அணிந்து ஊர்வலத்தில் பங்கேற்றனர். அதே சமயம் அரச பதவிகளை துறந்த இளவரசர் ஹாரியும், துஷ்பிரயோகம் புகாரில் சிக்கி அரச பதவிகளை இழந்த இளவரசர் ஆண்ட்ரூவும் சாதாரண உடையில் பங்கேற்றனர்.

மகாராணிக்காக இலட்சக்கணக்கில் குவிந்த மக்கள்! | Millions Of Maharanis People

அவர்களுடன் பாரம்பரிய உடைகளை அணிந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆயுதப்படை வீரர்கள் ராணியின் சவப்பெட்டியுடன் ஊர்வலமாக சென்றனர். இந்த பிரமாண்டமான ஊர்வலத்தை பார்ப்பதற்காக பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து வெஸ்ட்மினிஸ்டர் மண்டபம் வரை வழிநெடுகிலும் நூற்றுக்கணகக்கான மக்கள் திரண்டிருந்தனர்.

மதியம் 3 மணி அளவில் ஊர்வலம் வெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்தை அடைந்தது. பின்னர் வெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டி பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அதை தொடர்ந்து மாலை 5 மணிக்கு பொதுமக்களின் அஞ்சலிக்காக வெஸ்ட்மினிஸ்டர் மண்டபம் திறக்கப்பட்டது. ஆனால் ராணிக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் கடந்த திங்கட்கிழமை மாலையில் இருந்தே பல கி.மீ. தொலைவுக்கு நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றனர்.

ராணியின் இறுதி சடங்கு நடைபெறுகிற வருகிற 19-ந் திகதி காலை 6.30 மணி வரையில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் லண்டனில் குவிந்து வருகின்றனர்.

இதையொட்டி லண்டனில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellipallai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US