உக்ரைனில் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகவுள்ள மில்லியன் கணக்கான மக்கள்! WHO
உக்ரைனில் குளிர்காலத்தில் மில்லியன் கணக்கான மக்கள் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாவார்கள் என உலக சுகாதார அமைப்பு (World Health Organization) எச்சரித்துள்ளது. உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பில் பாதி சேதமடைந்துள்ளது அல்லது அழிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் தற்போது 10 மில்லியன் மக்கள் மின்சாரம் இல்லாமல் உள்ளனர் என்று ஐரோப்பாவுக்கான உலக சுகாதார நிறுவன பிராந்திய இயக்குனர் டாக்டர் ஹான்ஸ் ஹென்றி பி க்ளூக் தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் சுகாதார அமைப்பு இதுவரையிலான போரில் அதன் இருண்ட நாட்களை எதிர்கொள்கிறது.
இந்த மோதல் முடிவுக்கு வருவதே சிறந்த தீர்வாகும்.தாக்குதல்கள் காரணமாக, நூற்றுக்கணக்கான மருத்துவமனைகள் மற்றும் சுகாதார வசதிகள் இன்னமும் முழுமையாக செயல்படவில்லை.
மகப்பேறு வார்டுகளுக்கு இன்குபேட்டர்கள் தேவைஇ இரத்த வங்கிகளுக்கு குளிர்சாதன பெட்டிகள் மற்றும் தீவிர சிகிச்சை படுக்கைகளுக்கு வென்டிலேட்டர்கள் தேவை அனைத்திற்கும் ஆற்றல் தேவை' என்று அவர் கூறினார்.
அரவணைப்பு மற்றும் பாதுகாப்பைத் தேடி மூன்று மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.