கனேடிய மாகாணம் ஒன்றில் ஊழியர்களுக்கு காத்திருக்கும் மகிழ்வான செய்தி

Arbin
Report this article
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் குறைந்தபட்ச ஊதியத்திற்காக வேலை செய்யும் ஊழியர்களுக்கு அக்டோபர் மாதத்தில் மகிழ்வான செய்தி காத்திருக்கிறது.
நீண்ட பல ஆண்டுகளுக்கு பிறகு ஒன்ராறியோவில் இரண்டாவது முறையாக மணி நேரத்திற்கான குறைந்தபட்ச ஊதியம் அதிகரிக்கப்படுகிறது. அக்டோபர் 1ம் திகதி முதல் 14.25 டொலராக இருந்த குறைந்தபட்ச ஊதியமானது 14.35 டொலர் என உயர்கிறது.
மாணவர்கள், மதுபான விடுதியில் பணியாற்றும் ஊழியர்கள் ஆகியோருக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு மணிக்கு 13.40 டொலரில் இருந்து 13.50 டொலராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மதுபான விடுதி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் 12.45 டொலரில் இருந்து 12.55 டொலராக உயர்கிறது. குடியிருப்புகளில் பணியாற்றுவோருக்கும் குறைந்தபட்ச ஊதியம் அதிகரிக்கப்பட்டு, அவர்களும் இனி மணிக்கு 15.80 டொலர் பெறுவார்கள்.
ஒன்ராறியோ மாகாணத்தில் குறைந்தபட்ச ஊதியமாக 14 டொலர் இருந்ததை கடந்த 2020 அக்டோபர் 1ம் திகதி 14.25 டொலர் என உயர்த்தினர். ஏற்கனவே குறைந்தபட்ச ஊதியமாக 11.60 டொலர் என இருந்ததை கடந்த 2018ல் 14 டொலர் என உயர்த்தியது ஒன்ராறியோ நிர்வாகம்.
இதேப்போன்று, தற்போது 2022ல் ஊதிய உயர்வு இருக்குமா என்ற கேள்விக்கு, ஏப்ரல் 1ம் திகதி இது தொடர்பிலான உத்தியோகப்பூர்வ தகவல் வெளியாகும் என்றே கூறப்படுகிறது.