கனடா தேர்தலில் தலிபான்களால் தோல்வியை சந்தித்த அமைச்சர்!
கனடா பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டுள்ள நிலையில், தலிபான்களை சகோதரர்கள் என கூறிய முன்னாள் அமைச்சர் ஒருவர் தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளார்.
அதன்படி தெற்கு ஒன்ராறியோவின், பீட்டர்பரோ-கவர்தா தொகுதி எம்பி மரியம் மொன்செஃப் (maryam monse) என்பவே இவ்வாறு தோல்வியடைந்துள்ளார்.
முன்னாள் தொலைக்காட்சி ஆளுமை மற்றும் அரசியல்வாதி மைக்கேல் ஃபெரெரியிடம் தனது தொகுதியை அவர் இழந்துள்ளார்.
அவர் லிபரல் கட்சியை சேர்ந்த மரியம் மொன்செஃப் (maryam monse) தேர்தல் பிரச்சாரத்தின் ஆரம்பத்தில், தலிபான்களை எங்கள் சகோதரர்கள் என குறிப்பிட்டிருந்தமை பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் தேர்தலில் அவரது தோல்விக்கு, தலிபான்களை எங்கள் சகோதரர்கள் என அவர் குறிப்பிட்டிருந்தமையே காரணமாக கருதப்படுகிறது.