இஸ்ரேலில் கால்பந்தாட்ட மைதானத்தின் மீது ஏவுகணை தாக்குதல்!
இஸ்ரேல் - கோலன் மலைப்பகுதியில் உள்ள கால்பந்தாட்ட மைதானம் மீது ஏவுகணைத் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் இன்றைய தினம் (28-07-2024) இடம்பெற்றது.
குறித்த சம்பவத்தின் போது, 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த தாக்குதலினை லெபனானின் ஹெஸ்புல்லா அமைப்பு நடத்தியதாக இஸ்ரேல் குற்றம் சுமத்திய நிலையில் குறித்த அமைப்பு அதை மறுத்துள்ளது.
இவ் விடயம் தொடர்பில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கருத்து வெளியிடுகையில்,
ஹெஸ்புல்லா அமைப்பு இதற்கு பெரிய விலையை செலுத்தியாக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதே வேளை லெபனானில் இஸ்ரேல் நுழைந்தால் தாங்களும் தீவிரமான போரில் இறங்குவோம் என்று ஈரான் அரசும் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பினரின் இலக்குகளை தாக்கியுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
லெபானிற்குள் உள்ளே சென்றும், தென் லெபானிலும் இஸ்ரேலிய விமானப்படை விமானங்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் ஆயுதகளஞ்சியங்கள் உட்பட பயங்கரவாதிகளின் உட்கட்டமைப்புகள் இலக்குவைக்கப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.