சவுதி அரேபியாவை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் ; அதிரும் மத்திய கிழக்கு
யேமனில் பல்வேறு முனைகளில் சண்டை தீவிரம் அடைந்துள்ள நிலையில், சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்கை குறிவைத்து ஏவப்பட்ட இரண்டு ஏவுகணைகள் மற்றும் இரண்டு ஆளில்லா விமானங்களை (ட்ரோன்களை) இடைமறித்து அழித்ததாக சவுதி அரேபிய தலைமையிலான கூட்டுப் படைகள் தெரிவித்துள்ளன.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் எக்ஸ் (X) தளத்தில் வெளியிடப்பட்ட பதிவில், கூட்டுப் படையின் செய்தித் தொடர்பாளர் துர்க்கி அல்-மால்கி கூறுகையில், "ரியாத்கை நோக்கி ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவிய இரண்டு பொலிஸ்டிக் ஏவுகணைகளை வான் பாதுகாப்புப் படைகள் இடைமறித்து அழித்துள்ளன" என்றார்.

முன்னதாக சனிக்கிழமையன்று, ரியா மற்றும் தெற்குப் பகுதிகளில் சந்தேகத்திற்கு இடமான இரண்டு ஹவுதி ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டதாக அல்-மால்கி தெரிவித்தார்.
அல்-ஜவ்ப் மாகாணத்தின் அல்-ஹஸ்ம் மற்றும் மட்ஹல் மாவட்டங்களில் நடைபெற்ற கடுமையான சண்டையின் போது, ஹவுதிகளுக்கு எதிராக அரசுப் படைகள் முன்னேற்றம் கண்டுள்ளதாக யேமானிய இராணுவப் பேச்சாளர் கர்னல் மஜித் அல்-நுசைலி தெரிவித்தார்.
சவுதி அரேபியாவுக்கும் யேமனின் ஹவுதிகளுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்து வருவதைத் தொடர்ந்து, சவுதியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் சனிக்கிழமையன்று நாடு முழுவதும் பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்தது.
ஹவுதிகளின் தாக்குதல் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால் அமெரிக்கர்கள் "அதிகப்படியான எச்சரிக்கையுடன்" இருக்குமாறு அது கேட்டுக்கொண்டுள்ளது.
சவுதி அரேபியாவில் உள்ள சிவிலியன் விமான நிலையங்கள் மற்றும் பிற முக்கியமான உள்கட்டமைப்பு மீதான ஹவுதிகளின் தாக்குதல்கள் பொதுமக்கள் உயிரிழப்புகளையும் கடுமையான பயணத் தடைகளையும் ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்த தூதரகம், மோதல்கள் "வேகமாக" பரவக்கூடும் என்று எச்சரித்துள்ளது.