மாயமான மீனவர் சடலமாக மீட்பு: முடிவுக்கு வந்த 7 மாத தேடல்
வடக்கு Saskatchewan ஏரியில் மாயமான மீனவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், 7 மாதமாக முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கை முடிவுக்கு வந்துள்ளது.
Hague பகுதியை சேர்ந்த Matthew Hamm என்பவர் 2020 செப்டம்பர் மாதம் 23 முதல் காணாமல் போயுள்ளார். Weyakwin ஏரியில் மீன் பிடிக்க சென்றவர், அதன் பின்னர் குடியிருப்புக்கு திரும்பவில்லை என்றே உறவினர்கள் தெரிவித்திருந்தனர்.
25 வயதான இளைஞர் Matthew Hamm இரவு உணவுக்காக ஏரியில் மீன் பிடிக்க சென்றுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அவர் குடியிருப்புக்கு திரும்பாத நிலையில், அவரது தந்தையும் உறவினர்கள் உள்ளிட்ட ஒரு குழு அன்று இரவு முழுவதும் தேடியுள்ளது.
ஆனால் அவர் சென்ற படகு மட்டும் மீட்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவரை பத்திரமாக மீட்டு வருபவர்களுக்கு 100,000 டொலர் தொகை வெகுமதியாக அளிக்கப்படும் என அறிவித்தனர்.
மட்டுமின்றி இந்த விவகாரம் தொடர்பில் பொலிசாரும் தீவிரமாக விசாரித்து வந்தனர். இந்த நிலையில் மே 12ம் திகதி ஏரியில் இருந்து இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக Lloydminster மீட்புக்குழு அறிவித்தது.
உடற்கூராய்வில், அந்த சடலம் மாயமான இளைஞர் Matthew Hamm என்பவரது தான் என உறுதி செய்யப்பட்டுள்ளது.