அஜாக்சில் காணாமல் போன நபர் சடலமாக மீட்பு
கனடாவின் அஜக்ஸ் பகுதியில் காணாமல் போனதாக கூறப்பட்ட 31 வயதான நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
டர்ஹம் போலீசார் இந்த விடயத்தை அறிவித்துள்ளனர்.
அல்டின் காக்காமனி யாகூ என்ற 31 வயதான நபரே இவ்வாறு காணாமல் போயிருந்தார்.
ஒன்றாரியோ லேக் பகுதியில் ஜட் ஸ்கீ நீர் விளையாட்டில் ஈடுபட்டிருந்த பின்னர் காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபரின் அலைபேசி, ஜெட்ஸ் கீ படகு, பணப்பை உள்ளிட்ட பொருட்களை போலீசார் மீட்டுள்ளனர்.
போலீசார் குறித்த நபரை தேடி விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
இவ்வாறான பின்னணியில் குறித்த காக்கா மணி யாகூ என்பவர் சடலமாக மீட்கப்பட்டதாக போலீசார் அறிவித்துள்ளனர்.
காணாமல் போனவர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது பற்றிய தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
எவ்வாறு எனும் மரணத்தில் சந்தேகங்கள் கிடையாது என்ற வகையில் போலீசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.