கனடாவில் இளம்பெண் தொடர்பில் புகைப்படம் வெளியிட்டு கோரிக்கை
கனடாவின் கல்கரியில் மாயமான இளம்பெண் தொடர்பில் புகைப்படம் வெளியிட்டு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது பொலிஸ் தரப்பு.
கடந்த செவ்வாய்க்கிழமை உட்லண்ட்ஸ் பகுதியில் மதியத்திற்கு மேல் சுமார் 3.50 மணியளவில் 13 வயதேயான Sadie Pugsley கடைசியாக காணப்பட்டுள்ளார்.
தற்போது சிறுமியின் நலன் தொடர்பில் கவலை தெரிவித்துள்ள கல்கரி பொலிசார், இந்த விவகாரத்தில் ஏதும் அசம்பாவிதம் நடந்துள்ளதாக கருதவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், அம்பர் எச்சரிக்கை விடுக்கும் நிலை ஏற்படவில்லை எனவும், இருப்பினும் அவரது பாதுகாப்பு குறித்து அச்சம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி, அவரது தாயாருக்கு நெருங்கிய நண்பர் ஒருவரை சந்திக்கும் பொருட்டு Sadie Pugsley சென்றாரா என்பது தொடர்பில் உறுதியான தகவல் இல்லை எனவும், அவருக்கு நண்பர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால் அவர்கள் ஒவ்வொருவராக விசாரிக்கப்பட இருப்பதாக கல்கரி பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் விசாரணை அதிகாரிகளுக்கு உதவ முன்வர வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.