கனடாவில் காணாமல் போன பெண் எச்சங்களாக மீட்பு!
2020 இல் காணாமல் போனதாகக் கூறப்படும் ஒரு பெண், வான்கூவரின் ஷாக்னெஸ்ஸி சுற்றுப்புறத்தில் நீண்ட காலமாக காலியாக உள்ள வீட்டிற்கு வெளியே உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செல்சியா பூர்மன் (Chelsea Burman) எனும் குறித்த பெண் கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பரில் காணாமல் போனார். அவர் குறித்த தகவல் எதுவும் வெளியாகாத நிலையில், வான்கூவர் நகரத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு குடும்ப உறுப்பினரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் கிரான்வில் தெரு மற்றும் மேற்கு 37வது அவென்யூ அருகே காலியாக உள்ள வீட்டிற்கு வெளியே ஒரு ஒப்பந்ததாரர் மனித எச்சங்களைக் கண்டறிந்த பின்னர் அது குறித்து பொலிஸ் விசாரணை இடம்பெற்றது.
மரணம் குறித்து விசாரணை நடத்துவதற்காக பிரேத பரிசோதனை அதிகாரி வரவழைக்கப்பட்டார். பூர்மன் (Chelsea Burman) காணாமல் போன இரவோ அல்லது சிறிது நேரத்திலோ அந்த இடத்தில் இறந்துவிட்டதாக தெரிகிறது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மரணம் சந்தேகத்திற்குரியதாக கருதப்படவில்லை. பல ஆண்டுகளாக வீடு காலியாக இருந்ததால், பூர்மனின் (Chelsea Burman) உடல் இது வரை கவனிக்கப்படாமல் இருந்ததாக பொலிசார் கூறுகின்றனர்.
இந்நிலையில் இது யாரும் விரும்பிய முடிவு அல்ல. செல்சியா (Chelsea Burman) உயிருடன் இருப்பார் என்று நாங்கள் எப்போதும் நம்பினோம், மேலும் செல்சியாவை (Chelsea Burman) அறிந்த, அவளை நேசித்த மற்றும் அவள் பாதுகாப்பாக வீட்டிற்கு வருவாள் என்று நம்பிய அனைவருக்கும் எங்கள் அனுதாபங்கள் என பொலிஸ் சார்ஜென்ட் கூறினார்.