டொரண்டோ கேசினோகளில் கடன் சூதாட்ட மோசடி – 43 வயது நபர் கைது
ஓன்டாரியோ மாகாண போலீசாரின் (OPP) விசாரணையில், டொரண்டோ பகுதி கேசினோகளில் சட்டவிரோத கடன் வழங்கல் மற்றும் நிதிச் சலவை (Money Laundering) சம்பந்தப்பட்ட மோசடியில் 43 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
"Project EVENING" என அழைக்கப்பட்ட இந்த விசாரணை 2024 ஆம் ஆண்டு வசந்த காலத்தில் தொடங்கப்பட்டது.
இது குற்றவியல் வட்டி (Criminal Interest Rate) கொண்ட கடன் வழங்கல், மிரட்டல் (Extortion), மற்றும் நிதிச் சலவை (Money Laundering) உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் இருந்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, மிசிசாகா பகுதியில் உள்ள வீட்டில் தேடுதல் நடத்தப்பட்டு, செவ்வாய்கிழமை (Tuesday) "தி தவ் ஹோ" (Thi Thao Ho) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத வட்டி வழங்கல் (Criminal Interest Rate), மிரட்டல் (Extortion), மோசடி வழியாக பெற்ற சொத்துக்களை வைத்திருத்தல் (Possession of Property Obtained by Crime over $5,000) மற்றும் குற்றவியல் பணமூட்டல் (Laundering Proceeds of Crime) குறித்த நபருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கிற்கான கூடுதல் தகவல்களை போலீசார் வெளிப்படுத்தவில்லை. இருப்பினும், கடன் சூதாட்ட (Loan Sharking) மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் OPP-யை 1-888-310-1122 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும், தகவல் வழங்க விரும்பும் நபர்கள் 1-800-222-TIPS (8477) அல்லது ontariocrimestoppers.ca வழியாக அனாமதேயமாக புகார் செய்யலாம்.