கனடாவின் மிசிசாகா துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
கனடாவின் பீல் பிராந்தியத்தின் மிசிசாகா பகுதியில் புதன்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ட்ரான்மியர் ட்ரைவ் Tranmere Drive மற்றும் டெல்பொர்ட் வே Telford Way அருகே, டிக்சன் Dixon மற்றும் டெரி Derry சாலைகளின் சந்திப்பில், மதியத்திற்கு சிறிது முன்பாக இந்தச் சம்பவம் நடந்ததாக பீல் போலீசார் தெரிவித்தனர்.
40 வயதுகளில் இருந்த ஒரு ஆண் துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயங்களுடன் காணப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும், உயிர் காக்கும் முயற்சிகள் பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை தற்போது பீல் பிராந்திய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவம் தொடர்பான சந்தேகநபர்கள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் போலீசால் வெளியிடப்படவில்லை.
பொதுமக்கள் ஏதேனும் தகவல் அல்லது வீடியோ காட்சிகளை வைத்திருந்தால், வழங்கி உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நடுநாள் வேளையில், பரபரப்பான நேரத்தில் நடந்திருப்பது நிச்சயமாக கவலைக்குரியது. ஆனால் இது தனிப்பட்ட சம்பவமாகவே இருக்கலாம்.பொதுமக்கள் பாதுகாப்புக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை என பொலிஸார் தெரிவித்தள்ளனர்.