சவுதி அரேபியாவில் நீச்சல் உடையில் நடந்து சென்ற மாடல் அழகிகள்... அச்சரிய நிகழ்வு
சவுதி அரேபியாவில் உள்ள ரிசார்ட்டில் நடந்த பேஷன் ஷோ நிகழ்ச்சியில், முதன்முறையாக மாடல் அழகிகள் நீச்சல் உடையில் நடந்து வந்துள்ளனர்.
சவிதி அரேபியாவில் 10 ஆண்டுகளுக்கு முன் பெண்கள் உடல் முழுவதும் துணியால் மறைத்தபடி ஆடைகளை அணிய வேண்டும். மீறுபவர்களுக்கு அபராதம், தண்டனை ஆகியவை விதிக்கப்படும்.
ஆனால், சமீப காலங்களாக நிலைமை முற்றிலும் மாறி விட்டது. பெண்களுக்கு கார் ஓட்ட பல ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த தடை நீக்கப்பட்டு விட்டது.
இதேவேளை, சமீபத்தில் நடந்த பேஷன் ஷோ நிகழ்ச்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சவுதி அரேபியாவின் மேற்கு கடலோர பகுதியில் அமைந்த செயின்ட் ரெகிஸ் செங்கடல் ரிசார்ட்டில் இந்த பேஷன் ஷோ நிகழ்ச்சி நடந்தது. இதில், முதன்முறையாக மாடல் அழகிகள் நீச்சல் உடையில் நடந்து வந்தனர்.
அதுவும் சிவப்பு, பச்சை என பல்வேறு வண்ணங்களிலான ஒற்றை பிகினி உடையணிந்தபடி காட்சியளித்தனர்.
சிரியா, பிரான்ஸ் உள்பட பல்வேறு ஆசிய, ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்களும் இதில் பங்கு பெற்றனர். பார்வையாளர்களும் வழக்கம்போல் இந்த நிகழ்ச்சியை திறந்தவெளி பகுதியில் அமர்ந்தபடி கண்டு ரசித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்களில் சிலர் கைகளில் பை உள்ளிட்டவற்றை சுமந்து கொண்டு கடைக்கு செல்வது போலவும், சிலர் வெயிலுக்கு இதம் தரும் வகையில் கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டும் நடந்து சென்றனர்.