நவீன கால ஹிட்லர்.. ஹோட்டலில் ட்ரம்பை வெளுத்து வாங்கிய பெண்ணால் பரபரப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தலைநகர் வாஷிங்டன் டி.சியில் வெள்ளை மாளிகைக்கு அருகில் உள்ள பிரபல உணவகத்தில் இரவு உணவு அருந்த சென்றுள்ளார்.
அப்போது, அங்கு வந்த ஒரு போராட்டக்காரர்கள் குழு, "டி.சி-க்கு விடுதலை", "பாலஸ்தீனத்திற்கு விடுதலை" என கோஷங்களை எழுப்பினர்.
நவீன கால ஹிட்லர்
மேலும், ட்ரம்பை "நவீன கால ஹிட்லர்" என்றும் குறிப்பிட்டு கோஷங்களை எழுப்பினர்.
அவர்களின் கோஷங்களைக் கேட்ட ட்ரம்ப், அவர்களை வெளியேற்றுமாறு அதிகாரிகளுக்கு சைகை காட்டி காட்டினார்.'கோட் பிங்க்' என்ற பெண்ணிய செயற்பாட்டாளர் குழு இந்த போராட்டத்திற்கு பொறுப்பேற்றது.
அண்மையில் வாஷிங்க்டன் பாதுகாப்பற்றதாக இருப்பதாக கூறி வாஷிங்டன் டி.சி. பொலிஸார் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் டிரம்ப் கொண்டுவந்தற்கு எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.
Abuchean a Trump en un restaurante de Washington DC🇺🇸:¡Palestina libre!” “D. C. libre!”, gritaban y le llamaron “el Hitler de nuestro tiempo”. También le pidieron que saque las manos de Venezuela 🇻🇪pic.twitter.com/lpVMSnN7TT
— Carlos Montero (@CMonteroOficial) September 10, 2025