உயிர் அச்சுறுத்தல் காரணமாக கோட்டாபய பதவி விலகுவதனை தாமதப்படுத்தினார்
இலங்கையில் தமக்கு காணப்பட்ட உயிர் அச்சுறுத்தல் காரணமாக கோட்டாபய ராஜபக்ச பதவி விலகுவதனை தாமதப்படுத்தினார் என மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நசீட் தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றின் மூலம் நசீட் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகியுள்ளதாக மொஹமட் நசீட் அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய பதவி விலகியதாகவும், இலங்கை இனி முன்னோக்கி நகர முடியும் என நம்பிக்கை கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய நாட்டில் இன்னமுமும் இருந்திருந்தால் பதவி விலகியிருக்க மாட்டார் எனவும், அவர் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அஞ்சியதாகவும் நசீட் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் நசீட் தெரிவித்துள்ளார்.
https://twitter.com/MohamedNasheed/status/1547583437602979841
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        