குரங்கு காய்ச்சல் புதிய கோவிட் - 19 திரிபு அல்ல! உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட தகவல்
குரங்கு காய்ச்சல் புதிய கோவிட் - 19 திரிபு அல்ல என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த விடயத்தை ஐரோப்பாவுக்கான உலக சுகாதார அமைப்பின் பிராந்திய பணிப்பாளர் ஹான்ஸ் க்ளுக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குரங்கம்மை நோயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கை தொடர்பில் அதிகாரிகள் அறிந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், உலகளாவிய ரீதியில் எம்பொக்ஸ் நோயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஹான்ஸ் க்ளுக் தெரிவித்துள்ளார்.
நெருங்கிய தொடர்புகள் மூலம் மிகவும் எளிதாகப் பரவுவதன் காரணமாக எம்பொக்ஸ் உலகளாவிய ரீதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், உலக சுகாதார ஸ்தாபனம் எம்பொக்ஸ் நோய் நிலைமையைப் பொது சுகாதார அவசரகால நிலையாக அறிவித்துள்ளது.
எனினும், பொது மக்கள் பாதுகாப்பு முகக்கவசங்களை அணிவதற்கான பரிந்துரையினை முன்வைக்கவில்லை எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.