ஃப்ளோரிடாவில் இடம் பெற்ற படகு விபத்தில் கனடியர் பலி
அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் இடம்பெற்ற படகு விபத்தில் கனடிய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் கனடாவின் மொன்றியல் பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திடீரென குறித்த படகு தீப்பற்றிக் கொண்டு வெடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
படகில் ஏழு பயணிகள் பயணித்ததாகவும் படகின் எஞ்சினை செயற்படுத்திய போது திடீரென அது வெடித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மொன்றியலைச் சேர்ந்த செபஸ்டியன் கோத்தாயிர் என்ற 41 வயதான நபர் இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்த படகில் பயணித்த ஏனைய ஆறு பயணிகளும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த படகு விபத்திற்கான காரணங்கள் குறித்து கண்டறியும் நோக்கில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.