கனடாவில் அடுத்த ஆண்டில் ஏற்படக்கூடிய நோய்கள் குறித்து அறிவுறுத்தல்
எதிர்வரும் 2025 ஆம் ஆண்டில் கனடாவில் ஏற்படக்கூடிய நோய்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படுவதாக கனடிய பிரதம பொதுச் சுகாதார அதிகாரி டாக்டர் திரேசா டேம் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக பறவை காய்ச்சல் மற்றும் தட்டம்மை போன்ற நோய்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு தசாப்த காலமாக கனடாவில் தட்டம்மை நோய் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எவ்வாறு எனினும் அண்மைக்காலமாக தட்டம்மை நோயாளர்கள் பதிவாகி வருகின்றனர்.
இதே போன்று கனடாவில் பறவை காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டில் ஒரு பறவை காய்ச்சல் நோயாளி பதிவாகியிருந்தார்.
எனவே இந்த இரண்டு நோய்கள் தொடர்பிலும் மக்கள் போதிய அளவு அவதானத்துடன் இருக்க வேண்டும் என டாக்டர் டேம் தெரிவித்துள்ளார்.