கனடாவில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 15 சிறுவன் பலி
கனடாவில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 15 வயது சிறுவன் கொல்லப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கனடாவின் க்யூபெக் மாகாணம், லோங்குவெயில் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 15 வயது நூரான் ரெசாய் உயிரிழந்த சம்பவம் சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவனின் தந்தை ஷரிப் ரெசாய், மகன் எந்த தவறும் செய்யவில்லை எனக் கூறி, “எங்களுக்கு நீதி வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
“என் மகன் எப்போதும் சிரித்துப் பிறரைக் கவர்ந்த பையன். அவர் குழந்தை மட்டுமே. இந்தக் கொலை நியாயமல்ல” என தந்தை தெரிவித்துள்ளார்.
புத்தக பையை வைத்திருந்த மாணவன் மீது ஏன் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் 5 விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, மான்ட்ரியால் பொலிஸாரின் உதவியுடன் சம்பவத்தை விசாரணை செய்கின்றனர்.