கியூபெக்கின் பிரெஞ்சு மொழிச் சட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு
கியூபெக் மாகாணத்தில் பிரெஞ்சு மொழிச் சட்டத் திருத்தங்களுக்கு மக்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
பில்96 எனப்படும் பிரெஞ்சு மொழி திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டு மொன்றியலில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆங்கில மொழி பேசும் நபர்கள் நேற்றைய தினம் இந்தப் போராட்டத்தில் பங்குபற்றியிருந்தனர்.
ஆங்கில மொழி பேசும் சமூகத்தின் உரிமைகளை உதாசீனம் செய்ய அனுமதிக்கப்பட முடியாது என மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பிரெஞ்சு மொழி பாதுகாக்கப்படுவதனையும் மேம்படுத்தப்படுவதனையும் தாம் எதிர்க்கவில்லை என்ற போதிலும் அது ஆங்கில மொழி பேசுவோரின் உரிமைகளை நசுக்கும் வகையிலானதாக அமைந்து விடக் கூடாது என சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த பிரெஞ்சு மொழிக் கொள்ளையானது பழங்குடியின மக்களின் உரிமைகளையும் ஒடுக்கும் வகையிலானது என மேலும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.