கியூபெக் மாகாணத்தில் கடும் பனிப்பொழிவு குறித்து எச்சரிக்கை
கியூபெக் மாகாணத்தில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கியூபெக்கின் தென் பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் பனி மழை பெய்யும் சாத்தியங்கள் காணப்படுவதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இரண்டு முதல் ஐந்து மில்லி மீற்றர் வரையில் பனி மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதிகள் மற்றும் நடைபாதைகள் என்பனவற்றில் பனிப் படர்ந்திருக்கும் எனவும் வழுக்கும் தன்மையுடன் காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே வாகனங்களில் பயணம் செய்வோரும், பாதசாரிகளும் மிகுந்த அவதானத்துடன் பயணம் செய்ய வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
காலநிலையில் மாற்றம் ஏற்படும் வரையில் அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்ப்பது உசிதமானது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாகாணத்தின் சில பகுதிகளில் 15 மில்லி மீற்றர் வரையில் பனி மழை பெய்யும் சாத்தியங்கள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொஞ்சம் கொஞ்சமாக பனிப்பொழிவு அதிகரித்து வீதிப் போக்குவரத்திற்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.