கனடாவின் மொன்றியலில் கடும் மழை: பொதுமக்களிடம் விடுக்கபட்டுள்ள கோரிக்கை!
கனடாவின் மொன்றியலில் கடுமையான மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மொன்றியல் பெரும்பாக பகுதிகளில் இவ்வாறு கடுமையான மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
மாகாணத்தின் அநேக பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் மேல் மழை பெய்துள்ளது.
பிராந்தியத்தின் அநேகமான வீதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. காற்றின் வேகமும் வேகமாக காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மழை பெள்ளம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளம் காரணமாக மொன்றியலின் சில அதிவேக நெடுஞ்சாலைகள் மூடப்பட்டன.
சில வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதனால் அவற்றை பயன்படுத்த வேண்டாம் என பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய மற்றும் கிழக்கு கியூபெக் பிராந்தியங்களில் மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.