ரஷ்யாவுக்கு மேலும் தலைவலி; நேட்டோவில் இணைந்தது சுவீடன்!
நேட்டோ அமைப்பில் சுவீடன் நேற்றிரவு உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்ட நிலையில் நேட்டோவின் 32 ஆவது அங்கத்துவ நாநாடாக சுவீடன் உள்ளது.
நீண்டகாலம் அணிசேரா நாடாக விளங்கிய சுவீடன், உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் பின்னர், நேட்டோவில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்தது.
எனினும், நேட்டோவில் சுவீடன் இணைவதற்கான சம்மதத்தை தெரிவிப்பதற்கு துருக்கியும் ஹங்கேரியும் தயங்கிவந்தன.
அதன் பின்னர் துருக்கியும் ஹங்கேரியும் நேட்டோவில் சுவீடன் இணைய தமது சம்மத்தை தெரிவித்த நிலையில், சுவீடன் நேட்டோவில் இணைந்துகொண்டது.
இந்நிலையில் நேட்டோவில் சுவீடன் இணைந்ததை வரவேற்றுள்ள சுவீடன் பிரதமர் ஊல்வ் கிறிஸ்டேர்சன், இது சுதந்திரத்துக்கான ஒரு வெற்றி என கூறியுள்ளார்.