கனடாவில் வெங்காயம் தொடர்பில் மீண்டும் வெளியான தகவல்
கனடாவில் விற்பனையில் இருக்கும் வெங்காயங்களில் சால்மோனெல்லா பாதிப்பு கண்டறியப்பட்டதால் மீண்டும் திரும்பப்பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த தகவலை கனேடிய உணவு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது Dorsey மற்றும் MVP பிராண்ட் மஞ்சள் வெங்காயம், Pier-C பிராண்ட் மஞ்சள் மற்றும் வெள்ளை வெங்காயம் மற்றும் ரிகா ஃபார்ம்ஸ் பிராண்ட் மஞ்சள் வெங்காயம் ஆகியவை திரும்பப்பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த அனைத்து வெங்காயமும் மெக்சிகோவில் பயிரிடப்பட்டவை, மட்டுமின்றி, ஒன்ராறியோ, கியூபெக், நோவா ஸ்கோடியா மற்றும் பிற மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களில் இவை விற்கப்படுகின்றன.
குறிப்பிட்ட வெங்காயம் மக்கள் வாங்கியிருந்தால் வெளியே வீசவோ, வாங்கிய கடைகளில் திரும்ப ஒப்படைக்கவோ செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.