மேலும் 4 இலங்கை தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் விபரீத முயற்சி!
பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தியப் பெருங்கடல் தீவான டியாகோ கார்சியாவில் மேலும் 4 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் உயிரை மாய்த்துக்கொள்ள முற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்தவையில் இன்றைய தினம் 15 வயதுடைய சிறுமி ஒருவரும், கடந்த சனிக்கிழமை மூன்று ஆண்களும் உயிரை மாய்த்துக்கொள்ள முற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றது.

மருத்துவ சிகிச்சை
அதேவேளை முன்னதாக உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற ஐந்து தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் மருத்துவ சிகிச்சைக்காக ருவாண்டாவிற்கு அனுப்பப்பட்டிருந்தனர்.
அவர்களில் இருவருக்கு மூன்றாம் தரப்பு நாடு ஒன்றில் குடியேறுவதற்கு பிரித்தானியா அனுமதி வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.