கொங்கோவில் மர்ம காச்சலால் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு ; வௌவால் காரணமா?

Sulokshi
Report this article
கொங்கோ ஜனநாயகக் குடியரசில் மர்ம நோயால் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொங்கோ ஜனநாயகக் குடியரசில் வடமேற்கில் உள்ள போலோகோ நகரில் முதல் வெடிப்பு கண்டுபிடிக்கப்பட்டதாகக் உலக சுகாதார அமைப்பின் (WHO) ஆப்பிரிக்கா அலுவலகம் கூறியது.
வௌவால் சாப்பிட்டு உயிரிழப்பு
ரத்தக்கசிவு காய்ச்சல் அறிகுறிகளைத் தொடர்ந்து மூன்று குழந்தைகள் வௌவால் சாப்பிட்டு இறந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த வெடிப்பு ஜனவரி 21 அன்று தொடங்கியது, மேலும் 53 இறப்புகள் உட்பட 419 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பிப்ரவரி 9 ஆம் தேதி போமேட் நகரில் இந்த மர்ம நோய் இரண்டாவது முறையாக பரவியது. 13 வழக்குகளின் மாதிரிகள், காங்கோ ஜனநாயகக் குடியரசின் தலைநகரான கின்ஷாசாவில் உள்ள தேசிய உயிரி மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக WHO தெரிவித்துள்ளது.
அனைத்து மாதிரிகளும் எபோலா அல்லது மார்பர்க் போன்ற பிற பொதுவான ரத்தக்கசிவு காய்ச்சல் நோய்களுக்கு எதிர்மறையாக உள்ளதுடன் சிலவற்றில் மலேரியா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .
அதேவேளை கடந்த ஆண்டு, காங்கோவின் மற்றொரு பகுதியில் டஜன் கணக்கான மக்களைக் கொன்ற மற்றொரு மர்ம காய்ச்சல் போன்ற நோய் மலேரியாவாக இருக்கலாம் என்று கருதப்பட்டமை குறிப்பிடத்தக்கது.