இங்கிலாந்தில் 600 க்கும் மேற்பட்ட குடிவரவுக் கைது
கடந்த மாதம் 600 க்கும் மேற்பட்ட குடிவரவுக் கைதுகள் செய்யப்பட்டதாகவும், அதிகாரிகள் 800 க்கும் மேற்பட்ட சோதனைகளை மேற்கொண்டதாகவும் இங்கிலாந்தின் உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 2025 ஜனவரி மாதம் சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் 828 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்போது, 609 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த ஆண்டு ஜனவரியுடன் ஒப்பிடுகையில் இது 73% அதிகரிப்பு என்று தொழிற்கட்சி அரசாங்கம் சுட்டிக்காட்டுகிறது. கன்சர்வேடிவ்கள் ஆட்சியில் இருந்தபோது 556 வருகைகளில் 352 கைதுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
தேர்தலுக்குப் பின்னர் தொழிலாளர் கட்சி எல்லைப் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. உள்துறை அலுவலக புள்ளிவிவரங்களின்படி, ஜூலை மாதம் முதல் குடிவரவு அமலாக்க அதிகாரிகளால் 5,424 வருகைகளில் 3,930 நபர்களுக்கு மேல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொத்தத்தில், தேர்தலுக்குப் பின்னர் சட்டவிரோதமாக குடியேறிய 16,400 க்கும் அதிகமானோர் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்று தொழிற்கட்சி கூறியது.
மேலும், புதிய தரவு வெளியிடப்படும் போது திங்கள்கிழமை (10) பிற்பகுதியில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அரசாங்கம் கூறுகிறது.