பிரான்ஸில் கடந்த 24 மணிநேரத்தில் 6ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
பிரான்ஸில் கடந்த 24 மணித்தியாலத்தில் Covid-19 தொற்றால் 6,528 பேர் பாதிக்கப்பட்டதோடு 34 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்ஸில் இதுவரை மொத்தமாக 71 இலட்சத்து 40ஆயிரத்து 294 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1இலட்சத்து 17ஆயிரத்து 589 பேர் மரணமடைந்துள்ளனர்.
பிரான்ஸில் தற்போது வரை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு 15இலட்சத்து 14ஆயிரத்து 985 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 1,049 பேர் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.
பிரான்ஸில் இதுவரையில் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 69இலட்சத்து 25 ஆயிரத்து 761 ஆக உயர்ந்துள்ளது.