இங்கிலாந்து பள்ளிவாசல் தீக்கிரை
இங்கிலாந்தின் பீஸ்ஹேவன் (Peacehaven) பகுதியில் உள்ள ஒரு பள்ளிவாசல் மீது வெறுப்புச் செயலாகக் கருதப்படும் தீவைத்தல் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
அந்தச் சமயத்தில் பள்ளிவாசலுக்குள் இருவர் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சனிக்கிழமை இரவு, முகமூடி அணிந்த இரு பேர் பள்ளிவாசலின் கதவைத் திறக்க முயன்ற பின்னர், படிக்கட்டுகளில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
பள்ளிவாசல் தலைவர் மற்றும் மற்றொரு வழிபாட்டாளர் உள்ளே தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது, வெளியில் பெரும் சத்தம் கேட்டதாக பள்ளிவாசல் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
பள்ளிவாசலின் கதவுக் கேமரா காட்சிகளில், முகமூடி அணிந்த இருவர் கதவைத் திறக்க முயற்சித்து, பின்னர் பெட்ரோல் ஊற்றி தீவைத்தது தெளிவாக தெரிகிறது.
தீயால் பள்ளிவாசலின் முன்பகுதி மற்றும் வெளியே நிறுத்தப்பட்ட வாகனம் சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.