நேபாளத்தில் சீரற்ற காலநிலையினால் 22 பேர் பலி, 12 பேரை காணவில்லை
நேபாளத்தில் கடும் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகள், மின்னல் தாக்கம் மற்றும் வெள்ளத்தால் குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 12 பேர் காணாமல் போயுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேபாளத்தின் கிழக்கு மலைப்பகுதியில் உள்ள இலாம் மாவட்டத்தின் பல கிராமங்கள் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் குறைந்தது 18 பேர் பலியாகியுள்ளதுடன், 7 பேர் காணாமல் போயுள்ளனர் என்று நேபாள காவல்துறை பேச்சாளர் பினோத் கிமிரே தெரிவித்தார்.
அதே மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தூங்கிக்கொண்டிருக்கும்போது, நிலச்சரிவு ஏற்பட்டதில் அவர்கள் வீடு முற்றாக புதைத்தது என்று இலாம் துணை நிர்வாக அலுவலர் போலநாத் குரகாய் கூறியுள்ளார்.
கடுமையான மழை மீட்பு நடவடிக்கைகளை தடை செய்துள்ளது. பல சாலைகள் நிலச்சரிவால் அடைக்கப்பட்டுள்ளன அல்லது முற்றிலும் அழிந்துள்ளன. குரகாய் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, வேறு மாவட்டங்களில் மின்னல் தாக்கத்தில் 3 பேர் மற்றும் தென் நேபாளத்தில் வெள்ளத்தில் 1 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை 114 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.