அமெரிக்காவிடமிருந்து போர் விமானங்களை கொள்வனவு செய்வது குறித்து தீர்மானிக்கவில்லை
அமெரிக்காவிலிருந்து F-35 போர் விமானங்களை கொள்வனவு செய்வது குறித்து அரசாங்கம் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என கனடாவின் பாதுகாப்பு கொள்முதல் செயலாளர் ஸ்டீபன் ஃபியூர் (Stephen Fuhr) தெரிவித்துள்ளார்.
பிரதமர் கார்னி இந்த விடயம் தீர்மானம் எடுப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார். 2023 ஆம் ஆண்டில், பல ஆண்டுகளாக நீண்ட தாமதங்களுக்கு பின்னர், கனடா மற்றும் அமெரிக்கா இணைந்து 88 F-35 போர் விமானங்களை கொள்வனவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
அதில் முதல் 16 விமானங்கள் தற்போது தயாரிப்பு நிலையிலுள்ளன.
இருப்பினும், கடந்த வசந்த காலத்தில் கனடா அரசு இந்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து வருவதாக தெரிவித்தது.
அமெரிக்காவுடன் எழுந்து கொண்டிருக்கும் பதற்றநிலையை மத்தியில், அப்போது இருந்த பாதுகாப்புத் துறை அமைச்சர் பில் பிளேர், மாற்று வாய்ப்புகளையும் ஆராய்வதாக கூறி, கோடை முடிவிற்குள் தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
அரசாங்கம் தயாராகும் வரை எந்த அழுத்தமும் இல்லை. இது மிகப்பெரிய தீர்மானம்; அதனை சரியான நேரத்தில் எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.