கனடாவில் நிதி நிறுவனம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
வட வான்கூவரை தளமாகக் கொண்ட பைன் இன்வெஸ்ட்ம்ன்ட் Fine Investment Inc. (அல்லது நிக் பினான்சியல் Nick Financial) என்ற நாணய மாற்று நிறுவனத்துடன் எந்தவித பண வைப்பு தொடர்பும் வைக்கக் கூடாது என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் நிதிச் சேவை ஆணையம் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
மாநில நிதி நிறுவன சட்டம் (Financial Institutions Act) மீறப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், இந்நிறுவனத்தின் மீது விசாரணை நடத்தி வருகிறது.
நிக் பினான்சியல் “Nick Financial மற்றும் அதன் ஒரே இயக்குநர் அலி நிக்பர்ஜம் (Ali Nikfarjam) ஆகியோர், நுகர்வோரிடமிருந்து பண வைப்பு செய்து, குறிப்பிட்ட காலத்திற்கு பின் நிச்சய வட்டி தரப்படும் என கூறி நாணய மாற்று திட்டத்தை நடத்தியுள்ளனர்,” எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, சட்டப்படி அனுமதியின்றி வைப்பு சேவையை மேற்கொண்டதாகக் கருதப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இந்த நிறுவனத்தில் பணம் வைப்பு செய்ய வேண்டாம், அதன் இணையதளத்தை வழக்கமாகப் பார்வையிட்டு புதிய தகவல்களை அறியவும், சந்தேகம் இருந்தால் நேரடியாக ஆணையத்தைத் தொடர்புகொள்ளவும் பரிந்துரைத்துள்ளது.
தற்போதைய வாடிக்கையாளர்கள், நிறுவனம் மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் நகலைப் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ஒப்பந்தத்தில், நிறுவனம் மற்றும் நிக்பர்ஜம், உடனடியாக அனுமதியின்றி வைப்பு நடவடிக்கைகளை நிறுத்த, தாங்கள் சட்டபூர்வமாக வைப்பு சேவையை நடத்த அனுமதிக்கப்பட்டவர்கள் என்று கூறுவதை நிறுத்த, மேலும் நவம்பர் 15க்குள் அனைத்து வாடிக்கையாளர் பணத்தையும் திருப்பிச் செலுத்த ஒப்புக்கொண்டுள்ளனர்.
அனைத்து பணங்களும் நவம்பர் 17க்குள் திருப்பி வழங்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட வேண்டும் என நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணை இன்னும் நடைபெற்று வருவதாகவும் ஒவ்வொரு மீறலுக்கும் அதிகபட்சம் 50,000 டொலர்கள் வரை நிர்வாக அபராதம் விதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது,” என குறிப்பிடப்பட்டுள்ளது.