சுயாட்சி குறித்து அல்பெர்டா மக்களின் நிலைப்பாடு
அல்பெர்டா மக்களில் பெரும்பான்மையினர் கனடாவில் இருந்து விலகிச் செல்ல விரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
மாநில சுயாட்சியைச் சுற்றியுள்ள தொடர்ச்சியான விவாதங்களின் மத்தியில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
Angus Reid Institute வெளியிட்ட புதிய கருத்துக் கணிப்பில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இன்று ஒரு மக்கள் வாக்கெடுப்பு நடைபெற்றால், வெறும் 29 சதவீதம் அல்பெர்டா மக்கள் மட்டுமே கனடாவிலிருந்து பிரிவதற்கு வாக்களிப்பதாக தெரிவித்துள்ளனர்.
அதிலும் பெரும்பாலானோர் உறுதியான முடிவை விட, அந்த நிலைப்பாட்டை நோக்கி சாய்ந்து இருப்பதாகக் கூறியுள்ளனர்.
மறுபுறம், சுமார் 65 சதவீதம் மக்கள் கனடாவில் தொடர வாக்களிப்பதாக தெரிவித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தங்கள் முடிவில் உறுதியாக உள்ளதாக கூறியுள்ளனர்.
இந்த ஆய்வு, அல்பெர்டா மற்றும் க்யூபெக் மாகாணங்களில் பிரிவினை மனப்பாங்கு மற்றும் கனடாவின் எதிர்காலம் குறித்த பார்வைகளை ஆய்வு செய்யும் மூன்று பகுதிகளைக் கொண்ட தொடர் ஆய்வின் முதல் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.