கனடாவில் இரண்டு நாட்களில் 5 வாகனங்கள் திருட்டு – 14, 15, 16 வயது சிறுவர்கள் கைது
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள Parry Sound பகுதியில் இரண்டு நாட்களில் ஐந்து வாகனங்களை திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று சிறுவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெப்ரவரி 5 ஆம் திகதி இரவு தொடங்கி பெப்ரவரி 6 ஆம் திகதி மதியம் 12.30 மணி வரை நடைபெற்ற சம்பவங்களில் 14, 15 மற்றும் 16 வயதுடைய மூன்று சந்தேகநபர்கள் தொடர்புடையவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
வாகன திருட்டு, உடைத்துச் செல்வது (break and enter) மற்றும் மோதல் விபத்துகள் உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

விரிவான விசாரணையின் பின்னர், இந்த அனைத்து சம்பவங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
திருடப்பட்ட ஐந்து வாகனங்களும் பின்னர் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் சில வாகனங்கள் இரவு நேர மோதல் விபத்துகளிலும் ஈடுபட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் மீது 5 வாகன திருட்டு குற்றச்சாட்டுகள், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல், 2 உடைத்துச் செல்வது குற்றச்சாட்டுகள், 3 சட்டவிரோத நுழைவு குற்றச்சாட்டுகள், கடன் அட்டை திருட்டு, 3 சேதப்படுத்தல் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
மூவரும் பிணை விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மார்ச் 5 ஆம் திகதி ஒன்றாரீயோ நீதிமன்றத்தில் முன்னிலையாக உள்ளனர்.