மரணத்தின் பின்னரான வாழ்வு குறித்து கனடியர்கள் நிலைப்பாடு என்ன?
மரணத்தின் பின்னரான வாழ்வு குறித்து நாம் அனைவர் மத்தியிலும் பல்வேறு நிலைப்பாடுகள் காணப்படுகின்றன.
மத நம்பிக்கைகளின் அடிப்படையில் மரணத்தின் பின்னரான வாழ்வு குறித்து மக்கள் மத்தியல் மாறுபட்ட நிலைப்பாடுகள் காணப்படுகின்றன.
அந்த வகையில் பெரும் எண்ணிக்கையிலான கனடிய மக்கள் மரணத்தின் பின்னரான வாழ்வு உண்டு என கருத்து வெளியிட்டுள்ளனர்.
அன்கு;ஸ் ரெய்ட் என்ற நிறுவனத்தினால் கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த கருத்துக் கணிப்பின் அடிப்படையில் பல கனடியர்கள் மரணத்தின் பின்னரான வாழ்வு குறித்து தங்களது நம்பிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.
பல்வேறு மதப் பிரிவுகளைச் சேர்ந்த இரண்டாயிரம் கனடியர்களிடம் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.
கருத்துக் கணிப்பில் பங்கேற்ற ஐந்து பேரில் மூன்று பேர் மரணத்தின் பின்னரான வாழ்வு குறித்த நம்பிக்கையை வெளியிட்டுள்ளனர்.
கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், இந்துக்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது மரணத்தின் பின்னரான வாழ்வு குறித்த நம்பிக்கைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் வெறும் 13 வீதமானவர்கள் மட்டும் மரணத்தின் பின்னரான மறுவாழ்வு கிடையாது என தெரிவித்துள்ளனர்.
ஏனைய பெரும்பான்மையானவர்கள் மரணத்தின் பின்னரான வாழ்வு குறித்து தங்களது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.