அமெரிக்க பொருட்களை புறக்கணிக்க விரும்பும் கனடியர்கள்
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை புறக்கணிப்பதோ, அமெரிக்காவுக்குச் சுற்றுப்பயணங்களை தவிர்ப்பதன் மூலம் கனடாவிற்கு நன்மை கிடைக்கும் என 80 வீதமான கனடியாகள் கருதுகின்றனர்.
நானோஸ் ஆய்வு நிறுவனத்தின் கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
அமெரிக்கப் பொருட்களை நிராகரிப்பதன் ஊடாக அந்நாட்டுடனான வணிகப் பேச்சுவார்த்தைகளை வலுவாக முன்னெடுக்கலாம் எனவும் பேரம் பேசும் பலம் அதிகரிக்கும் எனவும் கனடியர்கள் கருதுகின்றனர்.
அமெரிக்கா கனடா பொருட்களுக்குச் சுங்க வரி விதித்ததற்கு பதிலாக இத்தகைய புறக்கணிப்பு நடவடிக்கைகள் “பயனுள்ளதாகவோ அல்லது சில அளவுக்கு பயனுள்ளதாகவோ” இருக்கும் என 80 வீதமான கனடியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, 18% பேர் மட்டும் இது பயனற்றதாக கருத்து வெளியிட்டுள்ளனர்.
55 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் 85% பேர், அமெரிக்க பொருட்களை புறக்கணிப்பது கனடாவின் நிலைப்பாட்டை வலுப்படுத்தும் என தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கப் பொருட்களை நிராகரிக்க வேண்டுமென கருத்துக் கணிப்பில் பங்கேறற் அட்லாண்டிக் மாகாண கனடியர்கள் தெரிவித்துள்ளனர்.