கொலைகாரர்களுக்கு என்ன தண்டனை விதிக்கப்பட வேண்டும்? கனேடிய மக்கள் கருத்து
கொலைகளுடன் தொடர்புடைய நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டுமென கனேடிய மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
கனடிய மக்களில் பெரும்பான்மையானவர்கள் மரண தண்டனையை ஆதரவினை வெளியிட்டுள்ளனர்.
கருத்துக் கருத்துக் கணிப்பு ஒன்று நடத்தப்பட்டதாகவும், இதன் மூலம்; இந்த விடயம் தெரியவந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Research Co என்ற நிறுவனம் இந்த கருத்துக் கணிப்பினை முன்னெடுத்திருந்தது.
கொலைக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை தண்டிப்பதற்கு நாட்டில் மீண்டும் மரண தண்டனையை நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
கருத்துக் கணிப்பில் பங்குபற்றிய 54 வீதமானவர்கள் மரண தண்டனை விதிப்பிற்கு ஆதரவினை வெளியிட்டுள்ளனர்.
மாகாண அடிப்படையில் அல்பர்ட்டா மாகாண பிரஜைகளே மரண தண்டனை அமுலாக்கத்திற்கு கூடுதல் ஆதரவினை வெளியிட்டுள்ளனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.