சீனாவில் ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம்! 21 பேருக்கு நேர்ந்த விபரீதம்
சீன நாட்டின் ஷான்டாங் மாகாணத்தில் இன்றைய தினம் (06-08-2023) அதிகாலை 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கத்தால் 26 கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும், 21 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கத்தின் போது தூக்கத்திலிருந்த மக்கள் கண்விழித்து வீடுகளை விட்டு வெளியேறி வீதியில் தஞ்சமடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் சில இடங்களில் வீடுகள் இடிந்து சேதமாகி உள்ளன.
மேலும் அங்கு மீட்பு பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன. அதிர்ஷ்டவசமாக உயிர் பலி எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அந்நாட்டின் நிலநடுக்க அதிர்வை பதிவு செய்யும் மையம் உறுதி செய்துள்ளது.
அதாவது சீனாவின் தலைநகர் பீஜிங்கில் இருந்து சுமார் 300 கிலோமீட்டர் தெற்கு பகுதியில் டெசோ நகர் அமைந்துள்ளது.
இந்த நகரிலிருந்து தெற்கே 26 கிலோ மீட்டர் தொலைவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் அதிகாலை 2.33 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 5.5 என்ற அளவில் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், நிலநடுக்கத்தின் எதிரொலியாக பெய்ஜிங்-ஷாங்காய் ரயில்கள் மற்றும் பெய்ஜிங்-கௌலூன் ரயில்கள் உள்ளிட்ட சில வழித்தடங்களின் போக்குவரத்து சேவைகளை சீனா ரயில்வே இடைநிறுத்தியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.