அனைவரும் உதவுங்கள்... மகன் தொடர்பில் கண்ணீர் விட்டு கதறிய கல்கரி தாயார்

Arbin
Report this article
கல்கரியில் வால்மார்ட் வணிக வளாகத்தில் வாகனத்தை விட்டுவிட்டு மாயமான மகன் தொடர்பில், பொதுமக்கள் உதவ முன்வர வேண்டும் என தாயார் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் முதல் Jordan Boucher மாயமாகியுள்ளார். அவரது வாகனமானது வால்மார்ட் வணிக வளாகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் இருந்து மே மாதம் மீட்கப்பட்டுள்ளது.
இதுவரை அவர் தொடர்பில் எந்த தகவலும் இல்லாத நிலையில், அவரது தாயார் Roxana Osoroes வெள்ளிக்கிழமை ஊடகத்தினரை சந்தித்து, தமது மகனை கண்டுபிடிக்க உதவுமாறு கெஞ்சியுள்ளார்.
தமது இந்த கோரிக்கையை Jordan Boucher ஊடகங்களில் காண நேர்ந்தால் கண்டிப்பாக தம்மை தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் வசித்து வந்த தமது மகன், லொறி நிறுவனம் ஒன்றை துவங்குவதற்காக கல்கரிக்கு திரும்பியதாக அவர் தெரிவித்துள்ளார்.
மகன் தொடர்பில் இதுவரை எந்த தாவலும் இல்லை என்பது தம்மால் தாங்க முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
26 வயதான Jordan Boucher கடந்த ஆண்டு நவம்பர் 28ம் திகதி கல்கரிக்கு திரும்பியுள்ளார். அதுவரை பிரிட்டிஷ் கொலம்பியாவில் வசித்து வந்துள்ளார்.