வர்த்தகப் போர் முடிவிற்கு அமெரிக்கா - சீனா வர்த்தகப் பேச்சுவார்த்தைகள்
அமெரிக்க மற்றும் சீன அதிகாரிகள், ஸ்பெயினில் இரண்டாம் நாள் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர்.
அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஸ்கொட் பெசென்ட் (Scott Bessent) மற்றும் சீன பிரதி பிரதமர் ஹி லைப்பெங் (He Lifeng) தலைமையிலான இன்றைய பேச்சுவார்த்தைகள், சர்வதேச ரீதியாக இரண்டு பாரிய பொருளாதார நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் போரை முடிவிற்குக் கொண்டு வருவதற்கான அண்மைக்கால முயற்சி எனக் கருதப்படுகிறது.
சீனா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த உயர்மட்ட வர்த்தகப் பிரதிநிதிகள் இறுதியாகக் கடந்த ஜூலை மாதம் சந்தித்தனர்.
அந்தச் சந்திப்பின் போது அவர்கள் தமது வரிப் போர் நிறுத்தத்தை, நவம்பர் 10 ஆம் திகதிவரை மேலும் 90 நாட்களுக்கு நீடிக்க ஒப்பந்தத்தை மேற்கொண்டனர்.
அமெரிக்க ஜனாதிபதி தனது முதலாவது பதவிக் காலத்தில் டிக்டொக்கை தடைசெய்ய வேண்டும் எனத் திட்டமிட்டிருந்தார்.
இருப்பினும் பின்னர், பிரபலமான இணையதளப் பகிர்வு செயலி குறித்து தனது நிலைப்பாட்டை அவர் மாற்றியிருந்தார்.
இதுதவிர, ஏற்கனவே மூன்று தடவைகள் தடையினைத் தாமதப்படுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.