12 வயது மகனுக்குள் இருந்த ஆசையை நிறைவேற்றிய அம்மா; அப்படி என்ன செஞ்சாங்க தெரியுமா?
12 வயது நிரம்பிய தன் மகன், திருநங்கையாக மாற ஆசைப்படும் விஷயத்தை தனது அம்மாவிடம் கூற, அவரது விருப்பத்தை அந்த அம்மா நிறைவேற்றி உள்ளமை ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் டீன் ஏஜ் துவங்கும் முன்பே, பெண்களைப் போல, தனக்கு மார்பகங்கள் வேண்டும் என்ற ஆசையை கேட்டு, அவரது அம்மா அதிர்ச்சி அடைந்துள்ளார். நியூயார்க்கை சேர்ந்த சாலி ஹோமர் (வயது 44) என்பவரது 12 வயது மகன் ஜோய் வில்லா.
இவர் இந்த சிறு வயதிலேயே பெண்ணாக தன்னை உணரத் துவங்கியுள்ளார். இந்த ஆசையை தனது அம்மாவிடம் கூற, அவரது உள்ளுணர்வை புரிந்து கொண்ட அவரின் அம்மா, மகனது ஆசைக்கு குறுக்கே நிற்காமல், பெண்களுக்கு உரிய உடை, மேக் அப் கிட் உள்ளிட்ட அனைத்தையும் வாங்கி கொடுத்துள்ளார்.
மேலும், ஆணுக்குரிய பாலின குணங்கள் அதிகம் வரக்கூடாது என்பதற்காக, ஹார்மோன் பிளாக்கரையும், வில்லா பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில், பெண்கள் போல தனக்கு மார்பகங்கள் வேண்டும் எனவும், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் தனது அடுத்த ஆசையை, அம்மாவிடம் வில்லா கூற, அவர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். இருப்பினும் மீண்டும் அதற்கான முயற்சியில் இறங்கிய அவர், 14 வயது நிரம்பிய பின் தான், ‘ஆஸ்ட்ரோஜன் ஹார்மோன்’ மாத்திரையை உட்கொள்ள வேண்டும் எனவும், 18 வயதுக்கு பின் தான் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் தெரிந்து வருத்தப்பட்டிருக்கிறார்.
எனினும் வில்லாவின் ஆசை தான் முக்கியம் என தெரிவித்துள்ள அவரின் அம்மா, அவரது ஆசைகளுக்கு என்றும் தான் குறுக்கே நிற்கப்போவது இல்லை எனவும் தெரிவித்துள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.