மோட்டார் சைக்கிளுடன் மோதிய பொலிஸ் வாகனம்: மருத்துவமனையில் இருவர்
Etobicoke-ல் ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் ரொறன்ரோ பொலிஸ் வாகனம் ஒன்றோடொன்று மோதிய விபத்து குறித்து பொலிஸ் கண்காணிப்பு குழு விசாரணை முன்னெடுத்துள்ளது.
வியாழக்கிழமை மாலை நடந்த இந்த விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். இரவு 8 மணிக்கு முன்பு ஆறாவது தெரு மற்றும் பர்மிங்காம் தெரு பகுதியில் இந்த விபத்து நடந்ததாக பொலிசார் கூறுகின்றனர்.
30 வயது கடந்த ஒரு பெண்மணியும் இன்னொரு நபரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ரொறன்ரோ மருத்துவ உதவிக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவருக்குமே காயம் ஏற்பட்டுள்ளதாகவும், பொலிஸ் தரப்பில் எவருக்கும் பாதில்லை என தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குண்டான காரணம் விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என கூறப்படுகிறது.