ரொறன்ரோ பொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் இரங்கல் செய்திகள்
மிஸ்ஸிசாகுவாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் வெளியிட்டு வருகின்றனர்.
ரொறன்ரோ பொலிஸ் சேவையைச் சேர்ந்த 48 வயதான அன்ட்ரூ ஹொங் என்ற பொலிஸ் உத்தியோகத்தர் துப்பாக்கிச் சூட்டுக்குகு இலக்காகி உயிரிழந்தார்.
அன்ட்ரூ ஹொங் 22 ஆண்டுகள் பொலிஸ் சேவையில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் நகரம் முழுவதிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஹொங் மிகவும் அன்பான கருணையுள்ளம் கொண்ட உத்தியோகத்தர் என சக நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.
பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஹொங் காபி அருந்துவதற்காக சென்றிருந்த போது நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தார்.
ஹொங், மக்கள் உதவி கோரும் போது உடன் உதவி செய்யும் பண்புடைய நல்ல மனிதர் என சக நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் குடும்பத்தினருக்கு சகல உதவிகளையும் வழங்க றொரன்டோ பொலிஸ் ஆயத்தமாக உள்ளது என றொரன்டோ பொலிஸ் பிரதானி ஜேம்ஸ் ராமர் தெரிவித்துள்ளார்.